Categories
கிரிக்கெட் விளையாட்டு

ரோஹித்துக்கு இடமில்லை… நடராஜன் உள்ளிட்ட 4பேர் தேர்வு…. இந்திய அணி அறிவிப்பு …!!

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்த அணியுடன் டெஸ்ட்  போட்டி, 20 ஓவர் போட்டி, ஒருநாள் போட்டி என அடுத்தடுத்து தொடர்களில் பங்கேற்க உள்ளது. இதற்கான அணி தேர்வு நேற்று நடைபெற்றது. கொரோனா பெற்றுத்தொற்று காலம் இருப்பதால் கூடுதல் பந்துவீச்சாளர்களை இந்திய அணியில் தேர்வு செய்துள்ளது.

கூடுதல் பந்து வீச்சளர்களாக கமலேஷ் நாகர் கோடி, கார்த்திக் தியாகி, இஷான் போரெல் நடராஜன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ரோகித் சர்மா, இஷாந்த் சர்மா ஆகியோருக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை. அவர்கள் தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் இருப்பார்கள் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.

கொரோனா அல்லது காயம் காரணமாக வீரர்கள் விலக நேர்ந்தால், மாற்று வீரரை களமிறக்க கூடுதலாக வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |