Categories
கிரிக்கெட் விளையாட்டு

ரோஹித் போல அழுத ஷாபாலி…. உலக கோப்பை கண்ணீர் கதை ….!!

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி நேற்றைய உலகக்கோப்பை இறுதி போட்டியில் தோல்வியடைந்தது இந்திய ரசிகர்கள் அதிர்ச்சி அடையவைத்துள்ளது.

கிரிக்கெட் வீரர்களுக்கும் சரி , ரசிகர்களுக்கும் சரி உலக கோப்பை என்பது என்றுமே தீரா தாகம். குறிப்பிட்ட ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மட்டுமே நடைபெறும் இந்த போட்டிகளை வென்று கோப்பைகளை கைகளில் தவழ வைக்க அணிகள் மேற்கொள்ளும் சவால்கள் கடினமானவை. அவ்வாறு சவால்களை சந்தித்து  ஓர் ஆண்டுக்குள் இந்தியா தவறவிட்டு இருக்கும் கோப்பைகள் 3. ஆடவர் ஒருநாள் உலகக்கோப்பை போட்டி, 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கோப்பை, மகளிர் 20 ஓவர் உலக கோப்பை என மூன்றையும் இந்தியா இறுதிக் கட்டங்களில் நழுவவிட்டுள்ளது வேதனையான ஒன்று.

நேற்று நடைபெற்ற 20 ஓவர் மகளிர் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் பெரிது எதிர்பார்க்கப்பட்ட இந்திய மகளிர் அணி 85 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. மகளிர் தினத்தில் இந்திய அணி முதல்முறையாக கோப்பையை மகுடம் சூடும் என்று ஒட்டு மொத்த இந்திய ரசிகர்களும் தொலைக்காட்சி முன்பு அமர்ந்து காத்திருந்ததில் ஏமாற்றமே மிஞ்சியது.

அதே போல கடந்த ஜனவரி 17ஆம் தேதி முதல் பிப்ரவரி 9ஆம் தேதி வரை நடைபெற்ற 19 வயத்துக்குட்பட்டோர் உலக கோப்பை தொடர் முழுவதும் மாஸ் கத்தி வந்த இந்திய அணி இறுதி போட்டியில் பங்களாதேஷ் அணியுடன் 3 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த 2019ஆம் ஆண்டு மே இறுதி முதல் ஜூலை மாதம் பரபரப்பாக நடைபெற்ற ஆடவர் உலக கோப்பை தொடரில் முழுவதும் ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி அரையிறுதியில் நியூசிலாந்துடன் போராடி தோல்வியடைந்தது இப்படி தொடர்ந்து 3 உலக கோப்பையை ஒரே வருடத்தில் இந்திய அணி இழந்துள்ளது.

இந்த மூன்று போட்டிகளுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கின்றது. இந்திய அணியின் தோல்வியை தாங்கிக்கொள்ள முடியாமல் வீரர்கள் கதறி , அழுது கண்ணீர் வடித்தது. ஆடவர் உலக கோப்பையில் கடைசி வரை போராடிய தோனி கண்கலங்கி ஆட்டமிழந்தார். அதே போல ரோஹித் சர்மா அழுதது நாம் அனைவருக்கும் தெரியும்.

அதே போல நேற்றைய மகளிர் 20 ஓவர் போட்டியில் இந்திய அணியின் தோல்வியை தாங்கிக்கொள்ளாமல் இந்திய மகளிர் அணியினர் கண்கலங்கியதை போல இந்திய ரசிகர்களும் ட்வீட்டர் பக்க்கத்தில் தங்களின் வலியை பகிர்ந்து கொண்டனர். அப்படி ரசிகர் பகிர்ந்து கொண்ட இந்திய அணியினரின் வலிகளில் ஓர் ஒற்றுமை அணைத்து வீரர்களுக்கு இருந்தது. அதற்கு நாம் சற்று பின்னோக்கி செல்ல வேண்டும்.

நேற்றைய மகளிர் போட்டியில் இந்திய அணியை இறுதி போட்டி வரை எடுத்துச் சென்றார் ஷாபாலி வர்மா. அதே போல் 2019ஆம் ஆண்டு உலக கோப்பை தொடரில் இந்திய அணியை அரையிறுதி வரை அழைத்துச் செல்ல முக்கிய பங்காற்றியவர் ஹிட் மேன் ரோஹித் சர்மா. 19 வயதுட்பட்டோருக்கான உலக கோப்பை தொடரில் இந்திய அணியை இறுதி போட்டி வரை அழைத்துச் சென்றவர் ஜெய்ஸ்வால் இவர்கள் மூவருமே இந்திய அணி தோற்று விட்டது என்று காலகலங்கிய காட்சி நம் கண்களில் கண்ணீரை வர வைக்கின்றது.

2019ஆம் ஆண்டு நடந்த ஆடவர் உலக கோப்பை போட்டியில் ரோஹித் சர்மா 648 ரன் குவித்து தொடரிலே அதிகமான ரன் குவித்தரவராக வலம் வந்தார். 19 வயதுட்பட்டோருக்கான உலக கோப்பை தொடரில் 400 ரன் குவித்து அதிக ரன் குவித்தவராக ஜெய்ஸ்வால் முதலிடத்தில் இருந்தார். நேற்று நடந்த மகளிர் உலாக் கோப்பை 20 ஓவர் போட்டியில் 16 வயதான ஷாபாலி வர்மா இந்திய அணியில் அதிக ரன் குவித்த வீராங்கனையாக ஜொலித்தார்.

இப்படி அதிக ரன்கள் குவித்து இந்திய அணியை கோப்பையை வாங்க அழைத்து சென்ற இவர்கள் மூவரும் கண்கலங்கிய தருணம் ஒட்டு மொத்த இந்திய ரசிகர்களின் நெஞ்சில் மறக்க முடியாத காயமாக இருந்து வருகின்றது. நேற்றைய போட்டியில் இந்திய அணி தோற்று ஷாபாலி வர்மா கண்கலங்கிய தருணம் இந்திய ரசிகர்களின் மனதின் இருந்த காயத்தை வெளிப்படுத்தியுள்ளது.

Categories

Tech |