Categories
கிரிக்கெட் விளையாட்டு

சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தாலும், சாதனைப் படைத்த ரோஹித்…!!

இந்திய – வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஒன்பது ரன்களில் வெளியேறினார்.

இந்திய – வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி டெல்லியிலுள்ள அருண் ஜெட்லி, கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் டாஸ் வென்ற வங்கதேச அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது.

அதன் படி இந்திய அணியின் தொடக்க வீரர்களான கேப்டன் ரோஹித் சர்மா, ஷிகர் தவான் ஆகியோர் களமிறங்கினர். இதில் ரோஹித் அதிரடியாக முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டி ரசிகர்களுக்கு புத்துணர்வூட்டினார்.

ஆனால், அவர் ஐந்து பந்துகளில் 9 ரன்கள் அடித்திருந்த நிலையில் ஷபியுல் இஸ்லாம் பந்துவீச்சில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். இருந்த போதும் அவர் இந்தப் போட்டியின் மூலம் சில சாதனைகளை முறியடித்துள்ளார். அவற்றில்,

  • சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் அதிக ரன்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். இவர் இந்த சாதனையை 8 ரன்கள் அடித்திருந்த போது படைத்தார்.
  1. ரோஹித் சர்மா- 2,452
  2. விராட் கோலி -2,450
  3. கப்தில் -2285
  • இந்திய அணிக்காக அதிக சர்வதேச டி20 போட்டிகளில் பங்கேற்ற முதல் நபர் என்ற சாதனையைப் படைத்த முன்னாள் கேப்டன் தோனியின் சாதனையை முறியடித்துள்ளார்.
  • சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிகப் போட்டிகளில் விளையாடிய இரண்டாவது நபர் என்ற சாதனையை, பாகிஸ்தானின் முன்னாள் கேப்டன் அஃப்ரிடியுடன் இணைந்துள்ளார். இருவரும் 99 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியுள்ளனர்.

Categories

Tech |