Categories
கிரிக்கெட் விளையாட்டு

“இன்னும் 27 தான் தேவை” சச்சினை காலி செய்வாரா ரோகித்..!!

உலக கோப்பை தொடரில் சச்சினின் சாதனையை ரோகித் சர்மா முறியடிப்பாரா என்று எதிர்பார்க்கப்படுகிறது 

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலக கோப்பையில் இந்திய அணியின் துணை கேப்டன் ரோஹித் சர்மா மிக சிறப்பாக விளையாடி வருகிறார். இவர் எதிரணியின் பந்து வீச்சை துவம்சம் செய்து நடப்பு தொடரில் மட்டும் 5 சதங்களை பதிவு செய்துள்ளார். இதன் மூலம் ஹிட் மேன் என்று அழைக்கப்படும் ரோகித் சர்மா உலக கோப்பை தொடரில் அதிக சதங்கள் அடித்தவர் என்ற சாதனையை படைத்துள்ளார். மேலும் பல சாதனைகளை படைக்க இருக்கிறார்.

அந்த வகையில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் சாதனையை ரோஹித் தகர்ப்பதற்கு வாய்ப்புள்ளது. உலக கோப்பை தொடரில் அதிக ரன்கள் அடித்தவர் என்ற சாதனை சச்சின் வசமே உள்ளது. 2003 உலக கோப்பை தொடரில்  சச்சின் 673 ரன்கள் குவித்ததே சாதனையாக இருந்து வருகிறது. நடப்பு தொடரில் ரோகித் சர்மா 647 ரன்கள் விளாசியுள்ளார். இன்னும் 27 ரன்கள் அடித்தால் சச்சின் சாதனையை ரோகித் முறியடிப்பார்.

Image result for Sachin Tendulkar, Rohit Sharma

உலக கோப்பை அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியல் :

1. சச்சின் டெண்டுல்கர் – 673

 2. மேத்யூ ஹைடன் – 659

3. ரோகித் சர்மா – 647

4. டேவிட் வார்னர் – 638

5. ஷகிப் அல் ஹசன் – 606

நாளை நடைபெறும் உலக கோப்பை அரை இறுதியில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இதில் ரோகித் சர்மா 53 ரன்கள் அடிக்கும் பட்சத்தில் உலக கோப்பை தொடரில் 700 ரன்கள் குவித்த முதல் வீரர் என்ற சாதனையை படைப்பார் ரோகித்.

Categories

Tech |