சன் டிவியில் பிரபல சீரியலாக இருப்பது ரோஜா. தொடர்ந்து டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தில் இருந்து வரும் ரோஜா சீரியலில் சில தினங்களுக்கு முன்பு ரோஜாவின் அம்மா வீட்டிற்கு திரும்பி வருவது போன்ற காட்சிகள் ஒளிபரப்பப்பட்டது. இந்த சீரியலில் மெட்டி ஒலியில் நாயகியாக வந்த காயத்ரி ரோஜாவின் மாமியாராக நடித்துவருகிறார்.
இவர் சமீபத்தில் தனது மகளுடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் ரோஜாவின் மாமியாருக்கு இவ்வளவு குட்டி மகளா என ஆச்சரியத்துடன் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.