பெங்களூருவில் நேற்று முன்தினம் 67-வது தென்னிந்திய ஃபிலிம் ஃபேர் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவின்போது நடிகர் சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படம் 8 விருதுகளை குவித்தது. அதன்படி சிறந்த இயக்குனருக்கான விருதை சுதா கொங்காராகும், சிறந்த நடிகருக்கான விருதை நடிகர் சூர்யாவும், சிறந்த நடிகைக்கான விருதை அபர்ணா பாலமுரளியும், சிறந்த இசை ஆல்பத்துக்கான விருதை ஜி.வி பிரகாஷ் குமாரும், சிறந்த துணை நடிகைக்கான விருதை ஊர்வசியும், சிறந்த பின்னணி பாடகருக்கான விருதை கிறிஸ்டின் ஜோஸ் மற்றும் கோவிந்த் வசந்தாவும், சிறந்த பின்னணி பாடகிக்காண விருதை தீ-யும், சிறந்த ஒளிப்பதிவுக்கான விருதை நிகோத் பொம்மியும் பெற்றனர்.
அதன் பிறகு ஜெய்பீம் படத்திற்கும் 2 விருதுகள் கிடைத்தது. இந்த விருது வழங்கும் விழாவில் நடிகர் சூர்யா தன்னுடைய மனைவி ஜோதிகாவுடன் கலந்து கொண்டார். அப்போது நடிகர் சூர்யாவிடம் மீண்டும் ரோலக்ஸ் வேடம் வருமா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த சூர்யா, என்னை மிகவும் ஊக்கப்படுத்திய ஒருவர் கமல்ஹாசன். அவர் கேட்டவுடன் என்னால் மறுப்பு சொல்ல முடியவில்லை. அதனால் தான் ரோலக்ஸ் வேடத்தில் நடித்தேன். கமல்ஹாசனுக்காக மட்டும் தான் ரோலக்ஸ் வேடத்தில் நடித்தேன். மீண்டும் ரோலக்ஸ் கதாபாத்திரம் வருமா என்று கேள்விக்கு காலம் தான் பதில் சொல்லும். ஒருவேளை அந்த கேரக்டரில் படம் உருவானால் நிச்சயம் நான் நடிப்பேன் என்றார்.