ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனமானது புதியதாக கோஸ்ட் செனித் எடிஷன் காரை அறிமுகம் செய்துள்ளது.
ரோல்ஸ் ராய்ல் நிறுவனமானது ஆடம்பர வசதிகளைக் கொண்ட புதிய கோஸ்ட் செனித் எடிஷன் காரை அறிமுகம் செய்துள்ளது . இன்னும் இந்த காரானது அதிகாரப்பூர்வாக வெளியாகாத நிலையில், புதிய செனித் எடிஷன் கோஸ்ட் மாடல் பத்தாவது ஆண்டு விழாவை குறிக்கும் மாடலாக அமைந்துள்ளது. இது ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் எடிஷனின் ஹூராவின் கடைசி மாடலாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த காரானது 2020 இல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் , ரோல்ஸ் ராய்ஸ் கார்களில் ஃபேண்டம் சீரிஸ் மாடல்களுக்கு அடுத்த நிலையில் கோஸ்ட் இருக்கிறது. இந்த ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் மாடலின் செனித் எடிஷன் வெறும் ஐம்பது யூனிட்களாலேயே உருவாக்கப்படுகின்றன. குறிப்பாக ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் முதன்முதலாக 2009 ஜெனீவாவில் நடைபெற்ற சர்வதேச மோட்டார் விழாவில் காட்சிப்படுத்தப்பட்டது.
மேலும் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் மாடல் பென்ட்லி ஸ்பர் மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்-கிளாஸ், பி.எம்.டபுள்யூ 7 சீரிஸ் உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மாடலானது 2015 ஆம் ஆண்டு அப்டேட் செய்யப்பட்டு, தற்போது புதிய தலைமுறை மாடலானது வெளியாக இருக்கிறது.
இந்நிலையில் , புதிய செனித் எடிஷன் மாடலில் ரோல்ஸ் ராய்ஸ் பாரம்பரிய கிரில், எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், டி.ஆர்.எல்.கள், பிரத்யேக அலாய் வீல்கள், டூயல்-டோன் பெயின்ட் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் புதிய செனித் எடிஷன் போமியன் ரெட் மற்றும் பிளாக் டைமண்ட், இக்வாஸூ புளு மற்றும் அன்டலுசியன் வைட், பிரீமியர் சில்வர் மற்றும் ஆர்க்டிக் வைட் உள்ளிட்ட நிறங்களிலும் கிடைக்கிறது.
மேலும் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் செனித் எடிஷன் மாடலில் 6.6 லிட்டர், ட்வின்-டர்போசார்ஜ் செய்யப்பட்ட வி12 என்ஜினுடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த என்ஜின் 562 பி.ஹெச்.பி. பவர், 820 என்.எம். டார்க் மற்றும் 8-ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்சுடன் வருகிறது.