Categories
உலக செய்திகள்

அதிர்ச்சி.! 9000 ஊழியர்களை நீக்கும் பிரபல தொழில் நிறுவனம்!

பிரபல வாகன தயாரிப்பு நிறுவனமான ரோல்ஸ் ராய்ஸ் அதன் பணியாளர்களில் கிட்டத்தட்ட ஐந்தில் ஒரு பகுதியைக் குறைக்க உள்ளது, ஏனெனில்  கொரோனா வைரஸ் தொற்றுநோயால் பல ஆண்டுகளாக  வெற்றிகரமாக இயங்கிவந்த விமானத் தொழில் சறுக்கலை சந்தித்து வருகிறது.

ரோல்ஸ் ராய்சுக்கு சர்வதேச அளவில் 52000 பணியாளர்கள் உள்ளனர் இதில் 9,000  பணியாளர்களை குறைப்பதாகக் கூறிஉள்ளது, இது 30 ஆண்டுகளில் இல்லாதஅளவிற்கு தலைமையகத்தின் மிகப்பெரிய ஆள்  குறைப்பு ஆகும்.

ரோல்ஸ் ராய்ஸ்சின் தயாரிப்புகளான விண்வெளி இயந்திரங்கள் மற்றும் சேவைகளுக்கான தேவை  குறைந்துள்ளதால் இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளது எனவும் கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு முன்னர் காணப்பட்ட நிலைகளுக்குத் திரும்ப பல ஆண்டுகள் ஆகும் என அதன்  தலைமை அதிகாரி வாரன் ஈஸ்ட் தெரிவித்துள்ளார்.

உலகளாவிய விமான பயணத்தின் சரிவின் மூலம் விமானத் தொழில் போராடுகையில் ஆயிரக்கணக்கான வேலை இழப்புகளை உள்ளடக்கிய மறுசீரமைப்பு திட்டத்தில் மூத்த நிர்வாகிகள் பணிகளைத் தொடங்கியுள்ளதாக பைனான்சியல் டைம்ஸ் இந்த மாத தொடக்கத்தில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |