தமிழ் சினிமாவில் பாபநாசம் மற்றும் தர்பார் திரைப்படங்களில் உலகநாயகன் மற்றும் சூப்பர் ஸ்டாருக்கு மகளாக நடித்த அசத்தியிருப்பவர் நிவேதா தாமஸ். இவர் தெலுங்கு மற்றும் மலையாள சினிமாவிலும் நடித்து வருகிறார். ராஜராஜேஸ்வரி என்ற தொடரின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நிவேதா மை டியர் பூதம், அரசி, சிவமயம் உள்ளிட்ட தொடர்களில் நடித்துள்ளார். அதன்பிறகு குருவி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நிவேதாவுக்கு தெலுங்கில் வாய்ப்புகள் அதிக அளவில் குவிய தொடங்கியது. இவர் தெலுங்கில் நானியுடன் சேர்ந்து ஜென்டில்மேன் என்ற திரைப்படத்தில் நடித்தார்.
இது நிவேதாவுக்கு தெலுங்கில் முதல் படமாக இருந்தாலும் அடுத்தடுத்து சில படங்களில் நானிக்கு ஜோடியாக நடித்தார். இதனால் நிவேதா மற்றும் நானி காதலிப்பதாக டோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் நிவேதா தாமஸ் தன்னை பற்றி பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்ததோடு நானும் நானியும் நல்ல நண்பர்கள் என்று கூறினார். இந்த வதந்திகள் அடங்கிய நிலையில், மலையாள சினிமாவில் பல படங்களில் நடித்துக் கொண்டிருந்த நிவேதா மலையாள நடிகர் ஒருவருடன் காதலில் விழுந்தார். அந்த மலையாள நடிகரை சின்சியராக காதலித்த நிவேதா அவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று முடிவு செய்துள்ளார்.
ஆனால் நிவேதாவின் பெற்றோர் அந்த காதலுக்கு மறுப்பு தெரிவித்து விட்டனர். இதன் காரணமாக தன்னுடைய காதலை கைவிட்ட நிவேதா தன்னுடைய கேரியரில் கவனம் செலுத்தினார். மேலும் காதல் கிசுகிசுக்கள் குறித்து ஒரு முறை நிவேதாவிடம் செய்தியாளர்கள் கேட்டபோது நான் யாரையும் காதலிக்கவில்லை என்றும் எனக்கு இப்போது பட வாய்ப்புகள் அதிக அளவில் வருவதால் என்னுடைய கேரியரில் மட்டுமே கவனம் செலுத்துகிறேன் என்றும் கூறினார். அதோடு காதல் மற்றும் திருமணம் குறித்த பேச்சுக்கே தற்போது இடம் கிடையாது எனவும் நிவேதா கூறினார்.