இறப்பிலும் இணைபிரியாத தம்பதிகள் கருப்புக்குடிப்பட்டி கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கருப்புக்குடிப்பட்டி கிராமத்தில் அழகன் – வள்ளி தம்பதிகள் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு 1 மகன் மற்றும் 4 மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் வயது முதிர்வின் காரணமாக அழகன் கடந்த 18 – ஆம் தேதியன்று இயற்கை எய்தினார்.
இதனை அடுத்து கணவர் இறந்த துக்கம் தாளாமல் இறுதிச் சடங்கின்போது அழுது கொண்டிருந்த மூதாட்டியும் திடீரென உயிரிழந்துவிட்டார். இவ்வாறு கணவன் மனைவி இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனைத் தொடர்ந்து உறவினர்கள் இருவரின் உடல்களையும் ஒரே இடத்தில் நல்லடக்கம் செய்துள்ளனர்.