அமெரிக்க கனேடிய எல்லையில் குடும்பத்தார் முன்னிலையில் திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி குறித்த சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் வசித்து வரும் Brian Ray என்பவரும், கனடாவில் வசித்து வரும் Karen Mahoney என்பவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இருவரும் தங்களது குடும்பத்தார் முன்னிலையில் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளனர். அதிலும் குறிப்பாக கனடாவில் வசித்து வரும் Karen-ன் 96 வயது பாட்டி அவர்களுடைய திருமண நிகழ்வில் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என்று இருவரும் எண்ணியுள்ளனர்.
அதன்படி இந்த தம்பதி தங்களது திருமணம் அமெரிக்க கனேடிய எல்லையில் தான் நடக்க வேண்டும் என்று முடிவெடுத்துள்ளனர். அதன் பிறகு Brian, Karen இருவரும் இரு நாட்டு எல்லை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்த பிறகு அமெரிக்க கனடா எல்லையில் திருமணம் செய்து கொண்டனர். அப்போது கனடா பகுதியில் மணமகளின் குடும்பத்தினர் நிற்க, அமெரிக்கப் பகுதியில் தம்பதியரும் மணமகனின் குடும்பத்தாரும் நிற்க Brian, Karen-ன் திருமணம் சிறப்பாக நடைபெற்றுள்ளது.