பிரபல நடிகர் அருண் விஜய் ஹீரோயினுடன் எடுத்துக்கொண்டுள்ள ரொமான்டிக் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் வெளியான என்னை அறிந்தால், குற்றம் 23, தடம் என ஹிட் படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் அருண் விஜய். இவர் நடிப்பில் தற்போது சினம் என்ற படம் உருவாகி வருகிறது. இப்படத்தை ஜி.என்.ஆர்.குமரவேல் இயக்கியுள்ளார். மேலும் இப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடிகை பலக் லல்வாணி நடித்துள்ளார்.
இப்படத்தின் பாடல் சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் நடிகையுடன் அருண் விஜய் எடுத்துக் கொண்டுள்ள ரொமான்டிக் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.