முன்னணி நடிகை நயன்தாராவும் பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவனும் எடுத்துக்கொண்ட ரொமான்டிக் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா. இவரும் பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த ஐந்து ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். இவர்கள் கூடிய விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக தகவல் வெளியானது. இதற்கிடையில் இவர்கள் இருவரும் அவ்வப்போது வெளிநாட்டில் இருந்த படி போட்டோ ஷூட்களையும், நெருக்கமாக இருக்கும் செல்பிகளையும் எடுத்து அவர்களது வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் திரைத்துறையில் சூப்பர் காதல் ஜோடிகளாக வலம் வரும் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஆகிய இருவரும் நெருக்கமாக இருக்கும் மற்றொரு புகைப்படத்தை அவர்கள் இணையத்தில் வெளியிட்டுள்ளனர். இந்த ரொமான்டிக் புகைப்படத்திற்கு ரசிகர்கள் ஏராளமான லைக்குகளை குவித்து வருகின்றனர்.