இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் விளையாடுகிறது.
இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனாக இருந்த கபில்தேவ், இந்திய அணி வீரர்களுக்கு சில ஆலோசனைகளை வழங்கினார் . குறிப்பாக தற்போது அணியின் கேப்டனான விராட் கோலிக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.இதுகுறித்து பேட்டி ஒன்றில் அவர் கூறும்போது, “அணியின் கேப்டனாக இருக்கும் விராட் கோலி, இங்கிலாந்து ஆடுகளங்களில் பேட்டிங்கில் களமிறங்கும் போது பொறுமையுடன் விளையாட வேண்டும் . அதிக ஆக்ரோஷத்துடன் அவர் செயல்படக்கூடாது . இங்கிலாந்து ஆடுகளங்களில் பந்து நன்றாக ‘ஸ்விங்’ ஆகும் என்பதால் ,ஆக்ரோஷத்துடன் செயல்பட்டால் பலன் கிடைக்காது.
துல்லியமாக கணித்து பொறுமையுடன் செயல்பட வேண்டியது அவசியமாகும். தனக்குரிய தருணத்திற்காக காத்திருக்க வேண்டும் அப்போதுதான் அதிக ரன்களை குவிக்க முடியும். இங்கிலாந்தை சொந்த மண்ணில் வீழ்த்துவது கடினமானதுதான் என்பதை இந்திய அணிக்கு நினைவூட்டுகிறேன். இந்திய அணி பந்து வீச்சாளர்கள் அங்குள்ள ஆடுகளங்களுக்கு எப்படி பந்து வீசுகிறார்கள் என்பதை, பொறுத்தே முடிவுகள் மாறும். இங்கிலாந்து மைதானங்களில் பந்து நன்றாக ‘ஸ்விங்’ ஆகும் என்பதால், அந்த வகையில் இந்திய வீரர்களை விட இங்கிலாந்து வீரர்கள் ஒரு படி மேலே இருக்கின்றார்கள்”, என்று அவர் கூறினார்.