பிக் பாஸ் சீசன் 6 சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாளுக்கும் சண்டைக்கு பஞ்சாயமில்லாமல் சென்று கொண்டிருக்கிறது. அதன்படி தற்போது கன்வேயர் வழியாக வரும் பொருட்களை எடுக்க பிக் பாஸ் சீசன் 6 போட்டியாளர்கள் போட்டோ போட்டியாக உள்ளது. அப்படி ஒரு பொருளை எடுத்தபோது மணிகண்டன் தன்னை அடித்ததாக அமுதவாணன் புகார் அளித்துள்ள புரோமோ வீடியா வெளியாகி உள்ளது. அதில், எனக்கு வேற வேலை இல்ல பாரு என்றும் நீங்க ஃபிரேம் பண்றீங்க என்றும் அமுதவனிடம் மணிகண்டன் கூறினார்.
இதற்கு பதிலளித்த அமுதவாணன், உன்னை ஃபிரேம் பண்ணி எனக்கு ஒண்ணுமே இல்லை என்று தெரிவித்துள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் இதெல்லாம் ஒரு சண்டை. இதற்கு ஒரு புரோமோ வீடியோவா பிக் பாஸ். ப்ரோமோ வீடியோவை கொடூர மொக்கையாக இருக்கிறது. தயவு செய்து டாஸ்கை மாற்றவும். இந்த வாரம் சொதப்பல் என்று கூறி வருகிறார்கள். மேலும் இருப்பதிலேயே இந்த சீசன் தான் மிகவும் மோசமாக இருக்கிறது. ஒரு போட்டியாளர் கூட சரியில்லை. அனைவரும் போலி கேமரா இருப்பதை மனதில் வைத்து நடந்து கொள்கிறார்கள். என்னமோ போங்க பிக் பாஸ் என்று பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
#Day33 #Promo1 of #BiggBossTamil #BiggBossTamil6 – இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason6 #BiggBoss #பிக்பாஸ் #VijayTelevision @preethiIndia @NipponIndia pic.twitter.com/RfysWp7ceV
— Vijay Television (@vijaytelevision) November 11, 2022