தாக்குதலில் ஈடுபட்டு வந்த தலீபான் தீவிரவாத அமைப்பை சேர்ந்த 130 பேர் தேசிய பாதுகாப்பு இயக்குனரகத்தின் அதிகாரிகளிடம் சரணடைந்தனர்.
ஆப்கானிஸ்தான் நாட்டில் கடந்த சில தீவிரவாதிகளின் தாக்குதல் தொடர்ந்து அதிகரித்து வந்தது. இதனால் தீவிரவாதிகளை பிடிக்க அதிகாரிகள் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் தலீபான் அமைப்பு தீவிரவாதிகள் 130 பேர் தேசிய பாதுகாப்பு இயக்குனரகத்தின் மாகாண இயக்குனரக அதிகாரிகளிடம் சரணடைந்தனர். இதனை தேசிய புலனாய்வு செய்தி தொடர்பு அதிகாரியான ஜிலானி பர்ஹத் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர்களிடம் இருந்த 85 ஏ.கே.-47 ரக துப்பாக்கிகள், 5 பி.கே. துப்பாக்கிகள், 5 ராக்கெட் லாஞ்சர் மற்றும் வெடிபொருட்கள் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர் . இதனால் அமைதி மற்றும் நிலையான தன்மை வலுப்படும் என ஹெராத் பகுதியின் உயர் அதிகாரி தெரிவித்துள்ளார் . ஆனால் இதுகுறித்து தலீபான் தீவிரவாத குழுவிடம் இருந்து எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை .