Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ரொம்ப தொல்லை பண்ணுது…. அதான் இப்படி பண்றோம்…. மாநகராட்சி நிர்வாகத்தின் நடவடிக்கை….!!

தெருக்களில் சுற்றித் திரிந்த 30 நாய்களை பிடித்து கருத்தடை செய்யப்பட்டு வருகின்றது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் மாநகராட்சியில் தெரு நாய் தொல்லை அதிகமாக இருக்கின்றது. எனவே தெருநாய்கள் இரு சக்கர வாகனத்தில் செல்பவர்களை துரத்துவதும், தெருக்களின் வீடுகளின் முன் விளையாடும் குழந்தைகளை கடிப்பதுமாக இருக்கின்றது. இதனால் தெரு நாய் தொல்லையை கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

அதன்படி தெருக்களில் சுற்றித் திரியும் நாய்களை பிடித்து கருத்தடை செய்யப்பட்டு வருகின்றது. அதன்படி மாநகரில் பல்வேறு இடங்களில் சுற்றித் திரிந்த 30 நாய்கள் பிடிபட்டு அவை தோவாளையில் உள்ள நாய்கள் பராமரிப்பு மையத்திற்கு கொண்டு சென்று கருத்தடை செய்யப்படும். அதன்பின் நாய்கள் 3 நாட்கள் பராமரிப்பு மையத்திலேயே வைக்கப்பட்டு மீண்டும் பிடிபட்ட இடத்திலேயே விடப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |