Categories
உலக செய்திகள்

தேசப்பிதாவின் உருவச்சிலைக்கு…. மரியாதை செலுத்திய இந்திய பிரதமர்…. வரவேற்பு அளித்த மக்கள்….!!

ரோம் நகருக்கு சென்ற பிரதமர் தேசப்பிதாவிற்கு மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளார்.

இத்தாலி தலைநகரான ரோமில் இன்றும் நாளையும் ஜி-20 நாடுகளின் 16வது உச்சி மாநாடு நடைபெறவிருக்கிறது. இதில் கலந்துகொள்வதற்காக இந்திய பிரதமர் மோடி ரோம் நகரம் சென்றுள்ளார். மேலும் இத்தாலி தலைநகரான ரோமில் பிளாசா பகுதி அமைந்துள்ளது. அப்பகுதியில் காந்திஜியின் உருவச்சிலை ஒன்று உள்ளது. அதற்கு அவர் மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளார்.

குறிப்பாக அங்கு குவிந்திருந்த ரோம் வாழ் இந்தியர்கள் பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர். இந்த மாநாட்டிற்கு இடையே அவர் வாடிகன் சென்று  போப்பாண்டவரை சந்தித்து பேசவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |