இத்தாலியின் ரோம் நகரில் பெனிட்டோ முசோலினி பேத்தி உள்ளாட்சித் தேர்தலில் முன்னணி வகித்துள்ளார்.
இத்தாலி நாட்டின் பாசிச சர்வாதிகாரி பெனிட்டோ முசோலினி பேத்தி ரேச்சல் முசோலினி(47) ஆவர். தற்போது ரோம் நகரில் கடந்த 3 ஆம் தேதி நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பிரபலமான வேட்பாளராக ரேச்சல் முசோலினி உருவெடுத்தார். இந்த தேர்தலின் இறுதி முடிவுகள் கடந்த புதன்கிழமை அன்று வெளியாகியது. இதில் 97% அதிகமான வாக்குச்சாவடிகளில் அளிக்கப்பட்ட வாக்குகள் எண்ணப்பட்டது. இதனை தொடர்ந்து ரேச்சல் முசோலினி 8,200 க்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்றது தெரிய வந்துள்ளது.
இந்த மக்கள் ஆதரவுக்கு, அவரது குடும்ப பெயரும் புகழும் காரணம் இல்லை என்று அவர் கூறியுள்ளார். மேலும் ரோம் நகர கவுன்சிலராக 2 ஆவது முறையாக பணியாற்றும் ரேச்சல் முசோலினி மக்கள் மனங்களில் நிறைந்துள்ளார். அதோடு “எனக்கு பல இடதுசாரி நண்பர்கள் உள்ளனர்” என்றும் ரேச்சல் முசோலினி செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
குறிப்பாக சர்வாதிகாரி முசோலியின் சந்ததியில், பலரும் அரசியலில் ஈடுபட்டுள்ளார்கள். மேலும் கடந்த ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை மிலன், நேபிள்ஸ் மற்றும் பொலோன்யா போன்ற முக்கிய நகரங்களில் உள்ள வலதுசாரி கட்சிகள் ஒட்டுமொத்தமாக மேயர் பதவிகளை இழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.