Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

ரொம்ப ஜாலியா இருந்தோம்… அலறி சத்தம் போட்ட தோழிகள்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

தனது தோழிகளுடன் ஏரிக்கு குளிக்க சென்ற சிறுமி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டத்திலுள்ள மேலமைக்கால்பட்டி பகுதியை சேர்ந்த கண்ணதாசன் என்பவர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் தற்போது கோயமுத்தூர் மாவட்டத்தில் வசித்து வருகின்றார். இவருக்கு ஏழாம் வகுப்பு படிக்கும் பாவனா என்ற மகள் இருந்துள்ளார். கடந்த வாரம் கண்ணதாசனின் மகளான பாவனா தனது பாட்டி வசிக்கும் மேலமைக்கால்பட்டிக்கு சென்றுள்ளார். இந்நிலையில் பாவனா தனது தோழிகளுடன் அப்பகுதியில் உள்ள ஏரிக்கு குளிப்பதற்கு சென்றுள்ளார். அப்போது பாவனா எதிர்பாராதவிதமாக தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கியுள்ளார்.

இதனைப் பார்த்த அதிர்ச்சியடைந்த தோழிகள் அலறி சத்தம் போட்டு உள்ளனர். இந்த அலறல் சத்தத்தை கேட்டு அருகில் இருந்தவர்கள் உடனடியாக வந்து நீரில் மூழ்கிய பாவனாவை மீட்டு உடனடியாக சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பாவனாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று பாவனாவின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிந்த காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |