Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

ரொம்ப நேரமா நின்னுட்டு இருந்தாங்க… வசமாக சிக்கிய சிறுவர்கள்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

கடையில் திருட முயற்சி செய்த மூன்று சிறுவர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தென்பாகம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து திருட்டு சம்பவங்கள் நடைபெறுவதாக அடிக்கடி காவல் நிலையத்திற்கு புகார்கள் வந்துள்ளது. இதனைத் தடுப்பதற்கு காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டும் திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் மர்ம நபர்களை பிடிக்க முடியவில்லை. இதனால்  மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ் ஆகியோர் இணைந்து தென்பாகம் காவல் நிலையத்தில் உள்ள சப்-இன்ஸ்பெக்டர் வேல்ராஜ் தலைமையில் தனிப்படை அமைத்து திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வரும் நபர்களை பிடிக்க உத்தரவிட்டுள்ளனர்.

அந்த உத்தரவின்படி தனிப்படை காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.இந்நிலையில் அண்ணாநகர் பகுதியில் வசிக்கும் பொன்ராஜ் என்பவரின் மளிகை கடையின் முன்பு நீண்ட நேரமாக 3 சிறுவர்கள் நின்று அங்கும், இங்கும் பார்த்துக் கொண்டிருந்தனர். இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அந்த சிறுவர்களை அழைத்து சோதனை செய்துள்ளனர். அதில் அவர்கள் சுத்தி, கம்பி போன்ற பொருட்களை வைத்திருந்ததை கண்டுபிடித்து விசாரித்தபோது அவர்கள் மளிகை கடையில் திருட சென்றது தெரியவந்துள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அந்த மூன்று சிறுவர்களையும் கைது செய்துள்ளனர்.

Categories

Tech |