நாடு முழுவதும் கொரோனா காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதையடுத்து தமிழகத்தில் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது. இதையடுத்து பெற்றோரின் கருத்துகேட்பிற்கு பின்னர் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. மேலும் 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்பு நடத்தப்படுகிறது. மேலும் மாணவர்களுக்கு பாடத்திட்டங்களும் குறைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மேலும் முதல் மற்றும் மூன்றாம் சனிக்கிழமை விடுமுறை அளிப்பது குறித்து தற்போது கூற இயலாது என்றும், 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் மீண்டும் டிஆர்பி தேர்வு எழுத வாய்ப்பு வழங்குவது குறித்து ஆலோசிப்பதாகவும் கூறியுள்ளார்.