சமீபத்தில் நடந்த விருது வழங்கும் விழாவில் கிறிஸ்டியானோ ரொனால்டோ கலந்து கொண்டுள்ளார். அந்த விழாவில் கிறிஸ்டியானோ ரொனால்டோ உரையாடியபோது கூறியதாவது “நான் வாங்கிய அனைத்து விருதுகளையும் எனது நண்பரான ஆல்பர்ட் என்பவருக்கு சமர்ப்பிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். ஆனால் அங்கு இருக்கும் யாருக்குமே அவருடைய நண்பரைப் பற்றி தெரியவில்லை. அந்த சமயத்தில்தான் கிறிஸ்டியானோ ரொனால்டோ அனைத்தையும் விளக்குகிறார்.
அவர் தனது நண்பரை பற்றி கூறியதாவது “நானும் எனது நண்பரும் சிறுவயதில் ஒரு ஃபுட்பால் கிளப்பில் இருந்தோம். அந்த சமயத்தில் ஸ்பான்ஸர் அனைவரும் சேர்ந்து அங்கு ஃபுட்பால் பந்தயத்தை வைக்கிறார்கள். அதில் யார் அதிகமாக கோல் அடிக்கிறார்களோ அவர்களை விட்ச் அகடமியால் பயிற்சி அளிக்கபடுவர் என்று கூறினார்கள். இந்த பந்தயத்தில் மூன்று கோல் அடித்து எங்கள் அணி வெற்றி பெறுகிறது. அதில் முதல் கோல் நான் அடித்தேன். இரண்டாவது கோல் என்னுடைய நண்பர் ஆல்பர்ட் அடித்தார்.
மூன்றாவது கோல் அடிக்கும் நேரத்தில் பந்து எனது நண்பரிடம்தான் இருந்தது. அவர் நினைத்திருந்தால் அதனை சுலபமாக கோலாக மாற்றி இருக்கலாம். ஆனால் அதற்கு பதிலாக ஆல்பர்ட் அந்த பந்தை என்னிடம் அனுப்பி வைத்தார். அதனால்தான் அந்த கோலை நான் அடித்தேன். இதனால் ஆல்பர்ட் உடைய ஃபுட்பால் வாழ்க்கை இதோடு முடிந்து விடும் என்று தெரியும். ஆனால் அதை பொருட்படுத்தாமல் எனக்கு ஆல்பர்ட் இந்த வாய்ப்பை விட்டுக் கொடுத்திருக்கிறார்.
அந்த மேட்ச் முடிந்த பிறகு என்னை விட்ச் அகடமி தேர்வு செய்தார்கள். அதன்பின் எதற்காக இதைப் போல் செய்தாய் என்று நான் ஆல்பர்ட்-யிடம் கேட்டேன். அதற்கு அவர் கூறியதாவது நீ என்னை விட மிகச்சிறந்த பிளேயர். நீ கண்டிப்பாக உலகத்திலேயே மிகச்சிறந்த ஃபுட்பால் ப்ளேயராக வருவாய் என்று ஆல்பர்ட் கூறினார்” என்று மனமுருக ரொனால்டோ தனது நினைவுகளை வெளிபடுத்தினார். அன்றைக்கு ஆல்பர்ட் இந்த கோலை விட்டுக் கொடுக்கவில்லை என்றால் இன்றைக்கு ரொனால்டோ இவ்வளவு பெரிய ஃபுட்பால் பிளேயராக வெற்றி பெற்றிருக்க முடியாது என்பது தான் உண்மை.