Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

ரோந்து பணியின் போது ….. வசமாக மாட்டிக்கொண்ட நபர் …. கைது செய்த காவல்துறையினர் ….!!!

டீக்கடையில் சட்ட விரோதமாக மதுபாட்டில் விற்பனை செய்து வந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் .

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்துள்ள வேட்டைக்காரனிருப்பு  காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் பக்கிரிசாமி மற்றும் போலீசார் ஆகியோர் அவரிக்காடு மெயின் ரோடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர் .

அப்போது அப்பகுதியில் உள்ள டீக்கடையில் திருட்டுத்தனமாக மதுபாட்டில் விற்பனை நடந்தது தெரியவந்தது .இதையடுத்து டீக்கடை நடத்தி வந்த ராஜா என்பவரை கைது செய்த போலீசார் கடையில் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

Categories

Tech |