Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

ரோந்து பணியின் போது …. வசமாக சிக்கிய 4 பேர் …. கைது செய்த காவல்துறையினர் …!!!

சாராய விற்பனையில் ஈடுபட்ட பெண் உட்பட  4 பேரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர் .

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அருகே உள்ள தேவூர், காக்கழனி, ராதாமங்கலம் ஆகிய பகுதிகளில் கீழ்வேளூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தேவூர்- இரட்டைமதகடி சாலை அடையாறு பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். இந்த விசாரணையில் அவர் தேவூர் பிடாரி கோவில் தெருவை பிரபு என்பதும் , இவர் சாராயம் விற்பனை செய்து வந்ததும்  தெரியவந்தது .இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 110 லிட்டர் சாராயத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

இதேபோல் காக்கழனி தோப்பு தெருவில் சட்டவிரோதமாக சாராயம் விற்று வந்த அதே பகுதியை சேர்ந்த  தங்கபாண்டியன் என்பவரும்,  ராதாமங்கலம் எறும்புகன்னி  மெயின் ரோடு பகுதியில் சாராயம் விற்பனை செய்த அதே பகுதியை சேர்ந்த கண்ணதாசன் மற்றும் கீழகாவலக்குடி காளவாய்கரை பகுதியில் சாராயம் விற்பனை செய்து வந்த நாகை வெளிப்பாளையம் தென்கரை பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்பவரின் மனைவி அமிர்தம் ஆகிய 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர் ,மேலும் அவர்களிடமிருந்து தலா 110 லிட்டர் சாராயத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

Categories

Tech |