வெளி மாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்துள்ள வேட்டைக்காரனிருப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பக்கிரிசாமி மற்றும் போலீசார் ஆகியோர் தாமரைப்புலம், கள்ளிமேடு ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தாமரைப்புல பகுதியை சேர்ந்த செல்லபாண்டியன்( 58) என்பவர் வெளி மாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
இதேபோல் கள்ளிமேடு கிராமத்திலும் லாட்டரி சீட்டு விற்பனை செய்துவந்த சம்பத்குமார்(49) செந்தில் குமார்(48) மற்றும் முருகானந்தம்(46) உட்பட 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களை கைது செய்துள்ளனர் .மேலும் அவர்களிடம் இருந்த லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர் .