நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அடுத்துள்ள தேவூர் பகுதியில் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது தேவூர்- இரட்டைமதகடிசாலை கடுவையாறு பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 2 பெண்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர் .இந்த விசாரணையில் நாகை வடக்கு நல்லியான் தோட்ட பகுதியை சேர்ந்த முத்துலட்சுமி மற்றும் தெற்காலத்தூர் நடுத்தெருவை சேர்ந்த இந்திராணி இந்திராணி என்பதும் இவர்கள் இருவரும் சட்டவிரோதமாக அப்பகுதியில் சாராயம் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் முத்துலட்சுமி இந்திராணி இருவரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்த 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.இதே போல் தெற்காலத்தூர் கடுவையாறு வடக்கு தெருவில் சட்டவிரோதமாக சாராயம் விற்ற நாகை செல்லூர் சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்த சத்யா என்பவரையும் காவல்துறையினர் கைது செய்து அவரிடமிருந்து 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.