பேருந்து நிலையத்தில் இருக்கும் மேற்கூரை பெயர்ந்து விழுந்ததினால் இருவர் பலத்த காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் இருக்கும் அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் இயங்கி வருகின்றது. இந்நிலையில் பேருந்து நிலையத்தில் அமைந்திருக்கும் மேற்கூரை திடீரென பெயர்ந்து விழுந்துள்ளது.
அங்கு நின்று கொண்டிருந்த தனியார் பேருந்தின் நடத்துனர் மற்றும் ஓட்டுநர் மீது மேற்கூரை பெயர்ந்து விழுந்துள்ளது. இதனால் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனைப் பார்த்ததும் அருகில் உள்ளவர்கள் இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அதன்பிறகு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறும்போது அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தை அதிகாரிகள் சீரமைத்து தர வேண்டும் என்று தங்களின் கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர்.