கேபின்களுக்கு தரச் சான்று வழங்கப்பட்ட நிலையில் தற்போது ரோப்கார் கட்டிடத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சோளிங்கர் பகுதியில் யோக லட்சுமி நரசிம்மர் கோவில் அமைந்திருக்கிறது. இந்நிலையில் 2010-ஆம் ஆண்டு 9 கோடியே 30 லட்சத்தில் அடிவாரத்திலிருந்து பெரிய மலைக்கு செல்ல ரோப்கார் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு இருந்தது. அதன்பின் கம்பிவடம் இணைக்கப்பட்டு மாதிரி கேபின்கள் அமைத்து சோதனை ஓட்டம் நடைபெற்றுள்ளது.
இதனை அடுத்து கொல்கத்தாவில் 10 லட்சம் மதிப்பீட்டில் 10 கேபின்கள் செய்யும் பணிகள் முடிந்துள்ளது. பின்னர் அந்த கேபின்களுக்கு தரச் சான்று வழங்கப்பட்டு முதல் தவணையாக 4 கேபின்கள் இரவு நேரத்தில் ரோப்கார் கட்டிடத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மீதமிருக்கும் 6 கேபின்கள் வந்ததும் கம்பிவடம் இணைக்கப்பட்டு அமைச்சர் முன்னிலையில் இறுதி கட்ட சோதனை ஓட்டம் நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.