Categories
சினிமா தமிழ் சினிமா

ரோட்டுக்கடைக்கு சாப்பிட சென்ற அஜித்… இன்ப அதிர்ச்சியில் கடைக்காரர்… வைரலாகும் புகைப்படம்…!!!

நடிகர் அஜித் வாரணாசியில் உள்ள ரோட்டுக் கடையில் சாப்பிட சென்ற போது கடைக்காரருடன் புகைப்படம் எடுத்துள்ளார் .

தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் அஜித் நடிப்பில் வலிமை திரைப்படம் தயாராகி வருகிறது . இயக்குனர் ஹெச் வினோத் இயக்கும் இந்த படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது வாரணாசியில் நடைபெற்று வருகிறது . இந்நிலையில் படப்பிடிப்பின் இடையே வாரணாசியில் உள்ள ரோட்டுக்கடை ஹோட்டலுக்கு நடிகர் அஜித் சாப்பிட சென்றுள்ளார்.

முதலில் மாஸ்க், தொப்பி அணிந்து வந்த அஜித்தை கடைக்காரர் அடையாளம் கண்டு கொள்ளவில்லை . பின்னர் சாப்பிடுவதற்காக அஜித் மாஸ்கை கழட்டிய போது கடைக்காரர் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளார். இதையடுத்து அந்தக் கடையின் உணவை நடிகர் அஜித் ரசித்து சாப்பிட்டு ஒவ்வொரு உணவு வகையும் எப்படி செய்யப்பட்டது ? என்ற விளக்கத்தையும் கடைக்காரரிடம் கேட்டுக்கொண்டுள்ளார் . மேலும் அந்த கடைக்காரர் நடிகர் அஜித்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது .

Categories

Tech |