Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

தேர்தல் பாதுகாப்பு பணிகள் தீவிரம்… உத்தரவிட்டார் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு… ரவுடிகளை கைது செய்த காவல்துறை…!!

கடலூர் மாவட்டத்தில் 40 ரவுடிகள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் கடலூர் மாவட்டத்தில் உள்ள ரவுடிகளை கைது செய்யுமாறு போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவின் பெயரில் பண்ருட்டி, விருத்தாசலம், சிதம்பரம், கடலூர், சேத்தியாத்தோப்பு உள்ளிட்ட 5 பகுதிகளுக்கு உட்பட்ட காவல் நிலையத்தில் பட்டியலில் உள்ள 40 ரவுடிகளை காவல்துறையினர் கைது செய்ய முடிவு செய்துள்ளனர். அதன்படி நேற்று இரவு ரவுடிகள் போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் தேர்தல் பாதுகாப்பிற்காக நடத்தப்படும் இந்த கைது நடவடிக்கை தொடரும் என காவல்துறை வட்டாரங்களில் இருக்கும் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |