பல்வேறு ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த ரவுடி கும்பலை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
மதுரை மாவட்டத்திலுள்ள செல்லூர் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது அப்பகுதியில் உள்ள கண்மாய்க்குள் ரவுடி கும்பல் பதுங்கியிருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று அந்த ரவுடி கும்பலை சுற்றி வளைத்து பிடித்து விசாரிக்கையில் அவர்கள் லோகேஷ், அஜித், சஞ்சீவிகுமார், தீனதயாளன் என்பது தெரியவந்துள்ளது.
மேலும் பிரபல ரவுடிகளான இவர்கள் குற்ற சம்பவங்களில் ஈடுபடுவதற்காக அப்பகுதியில் பதுங்கி இருந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அவர்களை கைது செய்து அவர்களிடம் இருந்த கஞ்சா, கத்தி, 120 போதை மாத்திரைகள், உருட்டுக்கட்டை போன்ற ஆயுதங்களை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.