பிரபல ரவுடியை குண்டர் சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மகளிர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பொது சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல், வழிப்பறி, தகராறு வழக்கு போன்ற குற்ற செயல்களில் ஈடுபட்டதால் பிரதாப் என்ற ரவுடி மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் வானூர் காவல்துறையினர் வழிப்பறி வழக்கில் பிரதாப்பை கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்து விட்டனர்.
இதனை அடுத்து இது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருவதால் பிரதாப்பை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன் கலெக்டருக்கு பரிந்துரை செய்துள்ளார். அதன்படி மாவட்ட கலெக்டர் பிரதாப்பை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு நகலை கடலூர் மத்திய சிறையில் இருக்கும் பிரதாப்புக்கு சிறை அலுவலர்கள் வழங்கியுள்ளனர்.