Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

பணம் கேட்டு மிரட்டல்…. வைரலான ஆடியோ பதிவு…. தனிப்படை காவல் துறையினரால் ரவுடி கைது…!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் மருந்துக் கடைக்காரரிடம் பணம் கேட்டு செல்போனில் மிரட்டல் விடுத்த ரவுடி தனிப்படை காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் மண்ணிவாக்கம் ராசாத்தி கலைஞர் நகர் என்ற பகுதியில் வினோத்குமார் என்பவர் வசித்துவருகிறார்.இவர் வண்டலூர் ஊராட்சியில் இருக்கின்ற ஓட்டேரி 4வது மெயின் ரோடு பகுதியில் மருந்து கடை வைத்து நடத்தி வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் அதே பகுதியை சேர்ந்த ரவுடி சிலம்பரசன் என்பவர் வினோத்குமாரை செல்போன் மூலமாக தொடர்பு கொண்டு 50 ஆயிரம் ரூபாய் கேட்டு மிரட்டிய ஆடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வந்தது. இதுகுறித்து மருந்து கடைக்காரர் வினோத் குமார் கொடுத்த புகாரின் பேரில், ஓட்டேரி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து வண்டலூர் துணை காவல்துறை அதிகாரி ரவிச்சந்திரன் மேற்பார்வையில் ஓட்டேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாஜி தலைமையில் 3 தனிப்படைகள் அமைத்து சிலம்பரசனை பல்வேறு இடங்களில் தீவிரமாக வலைவீசி தேடி வந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சிலம்பரசன், தாம்பரம் அருகே இருக்கின்ற இரும்புலியூர் பைபாஸ் சாலையில் நின்று கொண்டிருந்த அவர், அங்கிருந்து ஆந்திராவிற்கு தப்பிச் செல்ல இருப்பதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. காவல்துறையினர் உடனடியாக விரைந்து சென்று சிலம்பரசனை கைது செய்துள்ளனர். இதுபற்றி வண்டலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் கூறுகையில், கைதான சிலம்பரசன் மீது 9 வழக்குகள் இருக்கின்றன. குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வந்த சிலம்பரசன், சென்ற 22 ஆம் தேதி சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார்.அதன் பின்னர் மருந்து கடைக்காரரை செல்போன் மூலமாக மிரட்டி பணம் கேட்ட சம்பவம் சமூகவலைத்தளங்களில் பரவிக் கொண்டிருந்தது.

இந்த வழக்கில் காவல்துறையினர் தன்னை தேடிக் கொண்டிருப்பதை அறிந்த ரவுடி சிலம்பரசன் ஆந்திராவிற்கு தப்பிச் செல்வதற்கு முயற்சி செய்துள்ளார்.அச்சமயத்தில் இரும்புலியூர் பைபாஸ் சாலையில் தனிப்படை காவல்துறையினர் அவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ரவுடி சிலம்பரசனிடமிருந்து 3 செல்போன்கள் மற்றும் ஒரு கத்தி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட சிலம்பரசனை தனிப்படை காவல்துறையினர் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவரை சிறையில் அடைப்பதற்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |