சென்னை ராயப்பேட்டையில் காவல்துறையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்துபோது காரில் சென்ற ‘ரவுடி’ காக்கா தோப்பு பாலாஜியை கைது செய்துள்ளனர்.தலைமறைவாக இருந்த நிலையில் தற்போது இவர் சிக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், கைது செய்யப்பட்ட காக்காதோப்பு பாலாஜியை எம்.கே.பி. நகர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.இவர், மீது ஏற்கெனவே 25 கொலை வழக்குகள் உட்பட 50வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.