தலைமறைவான பிரபல ரவுடியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை மாவட்டத்திலுள்ள பிராட்வே பி.ஆர் கார்டன் பகுதியில் பிரபல ரவுடியான பாலாஜி என்பவர் வசித்து வருகிறார். இவர் மீது வழிப்பறி, கொள்ளை, கொலை போன்ற பல்வேறு வழக்குகள் காவல் நிலையங்களில் நிலுவையில் இருக்கின்றது. மேலும் இவர் 5 முறைக்கு மேல் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் கடந்த மாதம் ஜாமினில் வெளிவந்த பாலாஜி விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாகியுள்ளார். இதனையடுத்து ஆர்.கே.நகர் காவல்துறையினர் கைது செய்து அவரிடம் இருந்த பட்டாகத்தி, கஞ்சா போன்றவற்றை பறிமுதல் செய்துள்ளனர். இது குறித்து போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் கூறும் போது, பாலாஜி மீது 22 வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும், இன்னும் ஒரு வாரத்திற்குள் இதேபோன்று மற்ற ரவுடிகளும் கைது செய்யப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.