மர்ம கும்பலை சேர்ந்தவர்கள் ரவுடியை வெட்டிக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள வில்லிவாக்கம் பகுதியில் அலெக்ஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கொலை மற்றும் கொலை முயற்சிகான பல வழக்குகளில் சிக்கியுள்ளார். தற்போது கருணாகரன் என்பவரின் கொலை வழக்கில் அலெக்ஸ் கைதாகி சிறை சென்றுள்ளார். இப்போது ஜாமீனில் வெளிவந்த அலெக்ஸ் தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
கடந்த ஜூலை 31 – ஆம் தேதியன்று அலெக்ஸை 3 பேர் கொண்ட மர்ம கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டி சென்றுள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே அலெக்ஸ் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் அலெக்சன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மர்ம நபர்களை தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர்.