சேலத்தில் காவல் நிலையம் முன்பு தீக்குளிக்கும் முயற்சியில் ஈடுபட்ட ரவுடியை பொதுமக்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
சேலம் மாவட்டம் கிச்சி பாளையம் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி சிலம்பரசன் என்பவர் மீது 20க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இந்த நிலையில் கடந்த ஞாயிறு அன்று கிச்சிப்பாளையம் காவல் நிலையம் அருகே வந்த சிலம்பரசன் தனது காலில் டீசலை ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
இதனை பார்த்த பொதுமக்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டனர். அதில், சிலம்பரசன் மார்க்கெட் ரோட்டில் மாமூல் வசூலித்து வந்ததாகவும், போலீசாரிடம் கைதாகாமல் இருக்க இந்த நாடகத்தை அரங்கேற்றியதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.