Categories
சினிமா தமிழ் சினிமா

செம மாஸ்…. பைக் ஓட்டும் ராய் லட்சுமி…. வைரலாகும் வீடியோ….!!!

பிரபல நடிகை ராய் லட்சுமி பைக் ஓட்டும் மாஸான வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிரபல நடிகர் விக்ராந்தின் ‘கற்க கசடற’ எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை ராய் லட்சுமி. அதன்பிறகு தாம்தூம், அரண்மனை, காஞ்சனா, மங்காத்தா உள்ளிட்ட ஹிட் படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பிற மொழிகளிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமூக வலைத்தள பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் ராய்லட்சுமி அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை அதில் பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். அந்த வகையில் அவர் தற்போது கருப்பு நிற உடை அணிந்து பைக் ஓட்டும் மாஸான காட்சி ஒன்றை வீடியோ எடுத்து அதை அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்துள்ளார் இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

https://www.instagram.com/p/CPumvXfH5co/

Categories

Tech |