ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில்4 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் குவித்துள்ளது.
12வது ஐ.பி.எல் தொடரின் 14-ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன . இந்த போட்டி ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மன் சிங் ஸ்டேடியத்தில் இரவு 8 மணிக்கு தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரஹானே பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் விராட் கோலியும், பார்த்திவ் பட்டேலும் களமிறங்கினர். இதையடுத்து விராட் கோலி 23 (25) ரன்களில் ஆட்டமிழந்தார்.
அதன் பின் வந்த டிவில்லியர்ஸ்13, ஹெட் மேயர் 1 ரன்னில் ஆட்டமிழக்க அதன் பின் வந்த ஸ்டோய்னிஸும், பார்த்திவ் பட்டேலுடன் ஜோடி சேர்ந்து பொறுப்பாக விளையாடி ரன்கள் சேர்த்தனர். அதன் பின் பார்த்திவ் பட்டேல் 67 (41) ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மொயின் அலி 18 (9) ரன்களிலும், ஸ்டோய்னிஸ் 31* (28) ரன்களும் குவித்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
இறுதியில் 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் குவித்தது. ராஜஸ்தான் அணியில் அதிகபட்சமாக ஷ்ரேயஸ் கோபால் 3 விக்கெட்டுகளும், ஜோப்ரா ஆர்ச்சர் 1 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். பின்னர் 159 இலக்கை நோக்கி ராஜஸ்தான் அணி களமிறங்கி விளையாடி வருகிறது.