ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 10 ஓவர் முடிவில் 73/2 ரன்களுடன் விளையாடி வருகிறது
12வது ஐ.பி.எல் தொடரின் 14-ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன . இந்த போட்டி ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மன் சிங் ஸ்டேடியத்தில் இரவு 8 மணிக்கு தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரஹானே பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் விராட் கோலியும், பார்த்திவ் பட்டேலும் களமிறங்கினர். இருவரும் பொறுப்புடன் விளையாடி ரன்களை குவித்து வந்தனர்.
அதன் பின் விராட் கோலி 23 (25) ரன்களில் ஷ்ரேயஸ் கோபால் பந்து வீச்சில் கிளீன் போல்டனார். இதையடுத்து டிவில்லியர்ஸ், பார்த்திவ் பட்டேலுடன் ஜோடி சேர்ந்தார். சிறிது நேரம் தாக்கு பிடித்த டிவில்லியர்ஸ் 13 ரன்கள் எடுத்த நிலையில் ஷ்ரேயஸ் கோபால் பந்து வீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். தற்போது ஹெட் மேயர் 0 ரன்களிலும், பார்த்திவ் பட்டேல் 33 (18) ரன்களிலும் விளையாடி வருகின்றனர்.