Categories
கிரிக்கெட் விளையாட்டு

வில்லியம்சன் அதிரடியில் பெங்களூரு அணிக்கு 176 ரன்கள் இலக்கு!!

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழந்து 175 ரன்கள் குவித்துள்ளது 

ஐ.பி.எல் 54 வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு  மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விளையாடி வருகிறது. இப்போட்டி பெங்களூரு சின்ன சுவாமி ஸ்டேடியத்தில்  இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற பெங்களூரூ அணியின் கேப்டன் விராட் கோலி  பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக விருத்திமான் சாஹாவும், மார்ட்டின் கப்திலும் களமிறங்கினர். இருவரும் நல்ல துவக்கம் கொடுத்தனர்.

Imageஅதன் பிறகு சாஹா 20 (11) ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து வாஷிங்டன் சுந்தர் வீசிய 8வது ஓவரில் கப்தில் 30 (23) ரன்களிலும், மனிஷ் பாண்டே 9 ரன்களிலும் விக்கெட்டை பறி கொடுத்தனர். இதையடுத்து கேன் வில்லியம்சனும், விஜய் சங்கரும் ஜோடி சேர்ந்தனர். இருவரும் பொறுப்புடன் விளையாடி ரன்கள் சேர்த்தனர். அதன் பின் விஜய் சங்கர் 27 (18) ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இருந்த போதிலும் கேன் வில்லியம்சன் நிலைத்து நின்று விளையாடி ரன்கள் குவித்தார்.

Image

உமேஷ் யாதவ் வீசிய கடைசி ஓவரில் கேன் வில்லியம்சன் சிக்ஸர், பவுண்டரி என விளாச அந்த ஓவரில்  28 ரன்கள் சேர்ந்தது. இறுதியில் ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழந்து 175 ரன்கள் குவித்தது. கேன் வில்லியம்சன் 43 பந்துகளில் 70 ரன்கள் (5 பவுண்டரி 4 சிக்ஸர்) எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். பெங்களூரு அணியில் அதிகபட்சமாக வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுகளும், நவ்தீப் சைனி 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

Image

பின்னர் 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக பார்திவ் பட்டேலும், விராட் கோலியும் களமிறங்கினர். புவனேஸ்வர் குமார் வீசிய முதல் ஓவரில் பார்த்திவ் பட்டேல் 0 ரன்னில் ஆட்டமிழந்தார். அதை தொடர்ந்து விராட் கோலி 16 (7) ரன்களிலும், டிவில்லியர்ஸ் 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். தற்போது ஹெட் மையரும், குர்கீரத் சிங்கும் விளையாடி வருகின்றனர். பெங்களூரு அணி 6 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழந்து 49 ரன்களுடன் விளையாடி வருகிறது.

Categories

Tech |