Categories
கிரிக்கெட் விளையாட்டு

தனி ஆளாக கடைசி வரை போராடிய தல தோனி….. 1 ரன்னில் வென்றது பெங்களூரு….!!

பெங்களூரு அணி 1 ரன் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தியது 

ஐ.பி.எல் 39 வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு  அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதியது. இப்போட்டி பெங்களூரு சின்ன சுவாமி ஸ்டேடியத்தில் நேற்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பீல்டிங்கை  தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழந்து 161 ரன்கள் குவித்தது.

அதிகபட்சமாக பார்த்திவ் பட்டேல் 53 (37) ரன்கள் குவித்தார். மேலும்  டிவில்லியர்ஸ் 28 (19) ரன்களும், மொயின் அலி  26 ரன்களும், அக்ஷ்தீப் நாத் 24 ரன்களும் எடுத்தனர். சென்னை அணியில் அதிகபட்சமாக தீபக் சாஹர், ரவீந்திர ஜடேஜா, பிராவோ  ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், இம்ரான் தாஹிர்  1 விக்கெட்டுகளும் வீழ்த்தினார்.

இதையடுத்து 162 ரன்கள் இலக்கை நோக்கி சென்னை அணியின் தொடக்க வீரர்களாக  பாப் டு பிளசிஸும், சேன் வாட்சனும் களமிறங்கினர். டேல் ஸ்டெயின் வீசிய முதல் ஓவரில் 5வது பந்தில் வாட்சன் 5 ரன்னிலும், 6வது  பந்தில் ரெய்னா 0 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதன் பிறகு  பாப் டு பிளசிஸ் 5, கேதார் ஜாதவ் 9 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதையடுத்து கேப்டன் தோனியும், அம்பத்தி ராயுடுவும் ஜோடி சேர்ந்தனர்.

இருவரும் பொறுப்புடன் விளையாடி வந்த நிலையில் சஹல் சுழலில் ராயுடு 29 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு வந்த ஜடேஜா 11 ரன்களிளும், பிராவோ 5 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். கடைசி ஓவரில் வெற்றிக்கு 26 ரன்கள் தேவைப்பட்டது. உமேஷ் யாதவ் வீசிய அந்த ஓவரில் தோனி எதிர்கொண்டு  4,6,6, 2,6 ரன்கள் எடுக்க கடைசி பந்தில் 2 ரன்கள் தேவைப்பட ஆட்டத்தில் பரபரப்பு நிலவியது.

அந்த பந்தை தோனி மிஸ் செய்ய அந்த பந்து விக்கெட் கீப்பர் பார்த்திவ் பட்டேலிடம் சென்றது. அப்போது எதிரே நின்ற ஷரத்துல் தாக்கூரும், தோனியும் ஓட, பார்த்திவ் பட்டேல் சரியாக தாக்கூர் ஓடி வந்த திசையை நோக்கி குறி பார்த்து ஸ்டெம்பை எறிந்தார். இதனால் சென்னை அணி 1 ரன்னில் பெங்களூரு அணியிடம் தோற்றது. சென்னை அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழந்து 160 ரன்கள் எடுத்தது. சென்னை அணியில் தோனி 48 பந்துகள் 84* ரன்களுடன்  (7 சிக்ஸர், 5 பவுண்டரி)  ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இதனால்  பெங்களூரு அணி 1 ரன் வித்தியாசத்தில் வென்றது. பெங்களூரு அணியில் அதிகபட்சமாக டேல் ஸ்டெயின், உமேஷ் யாதவ் 2 விக்கெட்டுகளும், நவ்தீப் சைனி, சஹல் ஆகியோர் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

 

Categories

Tech |