கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
ஐ.பி.எல் 35 வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும்மோதியது . இப்போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் பந்து வீச்சை தேர்வு செய்தார். பெங்களூரு அணியில் டிவில்லியர்ஸுக்கு காயம் ஏற்பட்ட காரணத்தால் அவருக்கு பதிலாக டேல் ஸ்டெய்ன் சேர்க்கப்பட்டார். இதையடுத்து பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக விராட் கோலியும், பார்த்திவ் பட்டேலும் களமிறங்கினர். பார்த்திவ் பட்டேல் 11, அக்ஷ்தீப் நாத் 13 ரன்களில் வெளியேறினார்.
அதன் பிறகு மொயின் அலியும், விராட் கோலியும் ஜோடி சேந்தனர். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதன் பிறகு அதிரடியாக விளையாடிய மொயின் அலி 28 பந்துகள் 66 ரன்கள் (6 சிக்ஸர், 5 பவுண்டரி) குவித்து ஆட்டமிழந்தார். அதன் பின் இறுதிவரை அதிரடியாக விளையாடிய விராட் கோலி 58 பந்துகளில் 100 ரன்கள் (9 பவுண்டரி, 4 சிக்ஸர்) குவித்து கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். மார்கஸ் ஸ்டோய்னிஸ் அவர் பங்குக்கு 17* (8) ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இறுதியில் பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழந்து 213 ரன்கள் குவித்தது.
இதையடுத்து 214 ரன்கள் இலக்கை நோக்கி கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக கிறிஸ் லின்னும், சுனில் நரேனும் களமிறங்கினர். டேல் ஸ்டெய்ன் வீசிய முதல் ஓவரில் கிறிஸ் லின் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு சுனில் நரேன் 18, சுப்மன் கில் 9, உத்தப்பா 9 என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அப்போது அணியின் ஸ்கோர் 11.5 ஓவரில் 79 /4 ரன்களில் இருந்தது. அதன் பிறகு நித்திஷ் ராணாவும், ஆண்ட்ரே ரஸெலும் இணைந்தனர்.
இருவரும் ருத்ர தாண்டவத்தில் இறங்கினர். பவுண்டரி சிக்ஸருமாக விளாசி கடின இலக்கை நோக்கி பயணித்தனர். இருவரும் அரைசதம் கடந்து விளாசினர். ஸ்டோய்னிஸ் வீசிய 19 ஓவரில் கடைசி 3 பந்தில் ஆண்ட்ரே ரஸெல் 3 சிக்ஸர் பறக்க விட்டார். இதனால் ஆட்டம் மீண்டும் கொல்கத்தா பக்கம் திரும்பியது. இறுதியில் கடைசி ஓவரில் வெற்றிக்கு 24 ரன்கள் தேவைப்பட்டது. மொயின் அலி அந்த ஓவரில் 13 ரன்கள் மட்டுமே கொடுத்தார்.
அந்த ஓவரில் அதிரடி மன்னன் ரஸெல் 25 பந்துகள் 65 ரன்கள் (9 சிக்ஸர், 2 பவுண்டரி) ரன் அவுட் ஆனார். இறுதியில் கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழந்து 203 ரன்கள் எடுத்தது. இதனால் பெங்களூரு அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நித்திஷ் ராணா 46 பந்துகள் 85* ரன்களுடனும் (9 பவுண்டரி, 5 சிக்ஸர்), தினேஷ் கார்த்திக் 0* ரன்களிலும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். பெங்களூரு அணியில் அதிகபட்சமாக டேல் ஸ்டெய்ன் 2 விக்கெட்டுகளும், நவ்தீப் சைனி, மார்கஸ் ஸ்டோய்னிஸ் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.