ஹிந்துஸ்தான் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி வளாகத்தில் ராயல் என்ஃபீல்டு அனுபவ பயிற்சி மையம் திறக்கப்பட்டுள்ளது. இந்த அனுபவ பயிற்சி மையத்தை ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் தலைமை அதிகாரி பி. கோவிந்தராஜன் திறந்து வைத்தார். இந்த அனுபவ மையத்தை திறப்பதற்கு ராயல் என்ஃபீல்டு நிறுவனம், எச்ஐடிஎஸ் உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி ஊழியர்கள், ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் மற்றும் டெக்னாலஜி சேனல் பார்ட்னர்களின் ஊழியர்களுக்கு பயிற்சி வழங்கப்படும்.
அதோடு இந்த பயிற்சி மையத்தின் மூலமாக எச்ஐடிஎஸ் பொறியாளர்கள், மாணவர்கள், ராயல் என்ஃபீல்டு டீலர் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆகியோருக்கு ராயல் என்ஃபீல்டு பைக்குகளின் அனுபவமிக்க கற்றல் மற்றும் தொழில்நுட்ப அறிவும் வழங்கப்படும். மேலும் இந்த பயிற்சி மையமானது 11 ஆயிரம் சதுர அடியில் அமைதியான பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளதால் திறன் மேம்பாடு மற்றும் தொழில்நுட்ப பயிற்சியை எளிதாக வழங்க முடியும் என்று நிறுவனத்தின் அதிகாரிகள் கூறியுள்ளார்கள். அதோடு ராயல் என்ஃபீல்டு பைக் வாங்குபவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்து வரும் நிலையில் இந்த பயிற்சி மையத்தின் மூலமாக வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.