மறைந்த பிரிட்டன் மகாராணியாரின் உடல் பால்மோரல், மாளிகையிலிருந்து ஸ்காட்லாந்தில் இருக்கும் எடின்பர்க்கிற்கு எடுத்து செல்லப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
பிரிட்டன் மகாராணியான இரண்டாம் எலிசபெத், கடந்த எட்டாம் தேதி அன்று உடல்நல குறைவு காரணமாக மரணமடைந்தார். அவரின் மறைவிற்கு உலக தலைவர்கள் மற்றும் நாட்டு மக்கள் இரங்கல் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். மகாராணியின் இறுதிச்சடங்கானது வரும் 19ஆம் தேதி அன்று லண்டனில் இருக்கும் வெஸ்ட்மினிஸ்ர் வளாகத்தில் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அதற்கு முன்பாக ராஜ குடும்பத்தினர் மகாராணியாருக்கு இறுதி மரியாதை செலுத்தும் வகையில், அவரின் உடல் எடின்பர்க்கின் ஹோலிரூட்ஹவுஸ் மாளிகையில் நாளை வரைக்கும் வைக்கப்படவிருக்கிறது. இதற்காக மகாராணியாரின் உடலை எடின்பர்க்கிற்கு எடுத்து செல்கிறார்கள்.
ராஜ குடும்பத்தினர் அங்கு வந்து இறுதி மரியாதை செலுத்துவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து நாட்டு மக்கள் மகாராணியாருக்கு மரியாதை செலுத்த அவரின் உடல் லண்டனில் இருக்கும் வெஸ்ட்மினிஸ்டர் மண்டபத்தில் நான்கு தினங்கள் வைக்கப்படும் என்றும் கூறப்பட்டிருக்கிறது.