இன்று வெளியாகிய நடிகர் விஜயின் பிகில் படத்தை தமிழகம் முழுவதும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
பல்வேறு தடைகளை கடந்து நடிகர் விஜயின் பிகில் படம் இன்று திரைக்கு வந்துள்ளது. பெண்கள் கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்தில் நடிகர் விஜய் ராயப்பன் , மைக்கில் என்று இரண்டு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். உலகம் முழுவதும் இன்று திரையிடப்பட்ட பிகில் படத்திற்கு ரசிகர்கள் ஆரவாரம் மிகவும் உற்சாகமாகவே உள்ளது. ஏற்கனவே பிகில் படம் வெற்றியடைய வேண்டுமென்று தமிழக ரசிகர்கள் மண்சோறு சாப்பிட்டு கொண்டாடினர்.
தொடர்ந்து பிகில் படம் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து இன்று வெற்றிகரமாக திரைக்கு வந்தது. பல தியேட்டர்களில் அதிகாலையே சிறப்பு காட்சி போடப்பட்டது. இந்நிலையில் கிருஷ்ணகிரியில் உள்ள பிரபல திரையரங்கில் பிகில் திரைப்படம் வெளியிட தாமதமானதால் ரசிகர்கள் கோபமடைந்தனர். பின்னர் அங்கு ரகளையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கையில் அவர்களை போலீசார் அப்புறப்படுத்தினர்.