சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை கண்டந்துள்ளது மக்களை அச்சம் கொள்ள வைத்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 434 பேருக்கு கோரவனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 10 ஆயிரமாக உயர்ந்தது. அதிகபட்சமாக சென்னையில் 6947 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த எண்ணிக்கை இன்று 6 ஆயிரத்தை தொடும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் ராயபுரம் மண்டலத்தில் மட்டும் கொரோனா பாதிப்பு ஆயிரத்தைத் தாண்டியிருக்கிறது. நேற்று வரை 971 ஆக இருந்த எண்ணிக்கை தற்போது 76 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டதன் அடிப்படையில் ஆயிரத்தைத் தாண்டியிருக்கிறது. அதற்கு அடுத்தபடியாக கோடம்பாக்கம் மண்டலத்தில் 919 பேரும், திரு வி க நகர் மண்டலத்தில் 737 பேரும் கொரோனாவால் பாதிக்கப்ட்டுள்ளார்.