வேலையின்மைக்கு எதிராக மக்கள் அனைவரும் குரல் எழுப்ப வேண்டும் என காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.
கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த பெரும்பகுதியாக மத்திய மாநில அரசுகள் ஊரடங்கை கையாண்டு வந்தனர். இதன் காரணமாக பலர் வேலை வாய்ப்பை இழந்து தவிக்கும் சூழ்நிலை தற்போது நாடு முழுவதும் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நாடு முழுவதும் அதிகரித்து வரும் இளைஞர்களின் வேலையின்மை நெருக்கடிக்கு எதிராக குரல் கொடுக்குமாறு காங்கிரஸ் கட்சி மக்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளது. அதன்படி, இன்று (செப் 10) 7998799854 என்ற எண்ணிற்கு அழைத்து மக்கள் தங்கள் குரலை பதிவு செய்யலாம். மேலும் Rozgar Do என்ற ஹேஷ்டேக் மூலம் ஒரு நிமிட வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.