Categories
கிரிக்கெட் விளையாட்டு

RR VS DC : மில்லர் ,மோரிஸின் அதிரடி ஆட்டத்தால்…! 3 விக்கெட் வித்தியாசத்தில்… ராஜஸ்தான் அணி ‘த்ரில்’ வெற்றி …!!!

நேற்று மும்பையில் நடந்த ராஜஸ்தான்-டெல்லி அணிகிடையேயான போட்டியில் 3 விக்கெட்  வித்தியாசத்தில் ராஜஸ்தான் வெற்றி பெற்றது.

மும்பையில் நேற்று நடைபெற்ற  7ஆவது லீக் போட்டியில் , ராஜஸ்தான் ராயல்ஸ்  – டெல்லி கேப்பிட்டல்ஸ்  அணிகள்  மோதின . இதில்  டாஸ் வென்ற  ராஜஸ்தான் அணி  பவுலிங்கை  தேர்வு செய்ய ,டெல்லி அணி பேட்டிங்கில் களமிறங்கியது  .தொடக்க வீரர்களான பிருத்வி ஷா -ஷிகர் தவான் ஜோடி களமிறங்கினர்  .இதில் பிருத்வி ஷா  2 ரன்கள்  ,தவான் 9 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தனர்  .அடுத்து களமிறங்கிய  கேப்டன் ரிஷப்  பந்த் -அஜீக்யா ரஹானே ஜோடியில், ரஹானே  8 ரன்களை எடுத்து வெளியேறினார். இதன் பின் களமிறங்கிய மார்கஸ் ஸ்டோனிஸ் டக் அவுட் ஆகி வெளியேற , டெல்லி அணி  37 ரன்களில் , 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

கேப்டன்  ரிஷப்  பந்த் நிதானமாக ஆடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் .அவர் 32 பந்துகளில் 50 ரன்களை எடுத்து ரன் அவுட் ஆனார் .அதன் பின்  களமிறங்கிய வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர் . 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்களை எடுத்துள்ளது. அடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணி 148 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு விளையாடியது .தொடக்க வீரர்களாக ஜோஸ் பட்லர்- மனன் வோரா  ஜோடி களமிறங்கியது. ஆனால் டெல்லி அணியின் பவுலிங் சிறப்பாக அமைந்ததால் ,களமிறங்கிய வீரர்கள் அடுத்தடுத்து வெளியேறினர். இதனால்  ராஜஸ்தான் அணி 42 ரன்களிலே , 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

மறுபுறம் டேவிட் மில்லர் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி, அரை சதம் அடித்தார். அவர் 47 பந்துகளில் 62 ரன்களை அடித்து ஆட்டமிழந்தார். அவருடன் இணைந்து ஆடிய ராகுல் திவாட்டியா 19 ரன்கள் எடுத்து வெளியேறினார். இறுதியாக கிறிஸ் மோரிஸ்- உனத்கட் இருவரும் இணைத்து , அணியை  வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். இறுதியாக ராஜஸ்தான் அணி வெற்றி பெற 12 ரன்கள் தேவைப்பட்டது . கிரிஸ் மோரிஸ் 2 சிக்சர்கள் அடித்து விளாசி அணியை வெற்றி அடையச் செய்தார் .  கிரிஸ் மோரிஸ் 4 சிக்சர்கள் அடித்து 36 ரன்களை எடுக்க, உனத்கட் 11 ரன்கள்  எடுத்து அணியை வெற்றியடைய செய்தனர் . இறுதியாக ராஜஸ்தான் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியது.

Categories

Tech |